மெது பக்கோடா

Posted in Saturday, November 26, 2011
by Kolipaiyan

தேவையான பொருட்கள் :-

  • கடலை மாவு - 2 கப்,
  • அரிசி மாவு - 3/4 கப்,
  • பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன் அல்லது,
  • சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்,
  • வெண்ணை அல்லது,
  • வனஸ்பதி - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை,
  • வெங்காயம் - 1,
  • பச்சை மிளகாய் - 3 அல்லது 4,
  • இஞ்சி - ஒரு சிறு துண்டு,
  • முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்),
  • உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு,
  • எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :-

  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  • ஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணை அல்லது வனஸ்பதியைப் போட்டு அத்துடன் பேக்கிங் பவுடர் அல்லது சமையல் சோடாவைச் சேர்த்து, நுரைத்து வரும் வரை விரல்களால் நன்றாகத் தேய்த்து விடவும்.

  • பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் ஒரு கை தண்ணீரைச் சேர்த்துக் கலக்கி விடவும். அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி ஆகியவற்றைப் போட்டுக் கலக்கவும். கடைசியில் வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து விடவும்.

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். கலந்து வைத்துள்ள மாவின் ஒரு பகுதியில் சிறிது நீரைத் தெளித்து இளகலாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில், சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும்.

  • எல்லா மாவையும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து செய்யவும். அப்படி செய்வதால், மாவு புளித்து போகாமல், பக்கோடா அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும்.

குறிப்பு :-

தேங்காய்ச்சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

Read more

வெங்காய பக்கோடா

Posted in
by Kolipaiyan

தேவையான பொருட்கள் :-

  • பெரிய வெங்காயம் - 1/4 கிலோ,
  • கடலை மாவு - 100 கிராம்,
  • அரிசி மாவு - 50 கிராம்,
  • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி,
  • மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • கொத்தமல்லித்தழை - 1 கொத்து,
  • எண்ணெய் - 1/4 லிட்டர்,
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை :-

  • பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

  • நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவும்.

  • ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவும்.

  • தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிசறிக் கொள்ளவும்.

  • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்.

  • மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும். சுவையான வெங்காய பக்கோடா ரெடி.

குறிப்பு :-

வெங்காயம் முடிந்தவரை பெரிதாக இருக்க வேண்டும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

Read more

வாழைப்பூ பக்கோடா

Posted in
by Kolipaiyan

தேவையான பொருட்கள் :-

  • வாழைப்பூ - 1,
  • பெரிய வெங்காயம் - 2,
  • கடலை மாவு - 2 கோப்பை,
  • மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி,
  • சோள மாவு - 2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 3 கொத்து,
  • எண்ணெய் - 200 கிராம்,
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை :-

  • வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

  • அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  • பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும்.

  • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சுவையான வாழைப்பூ பக்கோடா ரெடி.

குறிப்பு :-

1. வாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது.

2. மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

Read more

முந்திரி பக்கோடா - 2

Posted in
by Kolipaiyan

தேவையான பொருட்கள் :-

  • முந்திரிப்பருப்பு - 150 கிராம்,
  • பொட்டுக்கடலை - 3 கப்,
  • அரிசிமாவு - ஒரு கப்,
  • பச்சை மிளகாய் - 5,
  • இஞ்சி - சிறு துண்டு,
  • வெங்காயம் - 2,
  • பெருங்காயம் - சிறிது,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • கொத்தமல்லி - சிறிது,
  • நெய் - ஒரு மேசைக்கரண்டி,
  • எண்ணெய் - தேவைக்கேற்ப,
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :-

  • பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து இரண்டு கப் அளவிற்கு மாவு எடுத்துக் கொள்ளவும்.

  • பிறகு அதனுடன் அரிசி, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

  • நெய்யை உருக்கி ஊற்றி, சிறிது தண்ணீரும் தெளித்து (தண்ணீர் அதிகம் விடக்கூடாது) நன்கு பிசைந்து கொள்ளவும்.

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உடைத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டுக் கொதித்தவுடன், அதில் மாவினை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  • வெங்காயம் சேர்க்காமலும் இதனை செய்யலாம். சுவையான முந்திரி பக்கோடா ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

Read more

முந்திரி பக்கோடா - 1

Posted in Friday, November 25, 2011
by Kolipaiyan

தேவையான பொருட்கள் :-

  • முந்திரி பருப்பு - 100 கிராம்
  • கடலை மாவு - 1 கோப்பை
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு


செய்முறை :-

  • கடலை மாவில் சிறிது தண்ணீர் தெளித்து முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் பிசறவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், பிசறிய முந்திரிப்பருப்பு கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான முந்திரி பக்கோடா ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

Read more
Copyright 2010 @ Abinaya Kitchen